ஹாக்கி

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.ஓ.பி. அணி வெற்றி

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) அணி 5-1 என்ற கோல் கணக்கில் அடையாறு யுனைடெட் கிளப்பை தோற்கடித்தது.

ஐ.ஓ.பி. அணியில் பிரப்ஜோத் சிங் 2 கோலும், தாலிப் ஷா, முத்துசெல்வன், ஹர்மன்பிரீத் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். அடையாறு யுனைடெட் அணியில் பிரதமேஷ் சந்தர்கானி ஒரு பதில் கோல் திருப்பினார்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் எஸ்.டி.ஏ.டி. - தெற்கு ரெயில்வே (பிற்பகல் 2 மணி), ஏ.ஜி.அலுவலகம்-இந்திய உணவு கழகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்