ஹாக்கி

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி கோல் மழை

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி கோல் மழை பொழிந்தது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய விளையாட்டு ஆணையம்-சென்னை மாநகர போலீஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய விளையாட்டு ஆணைய அணியில் அரவிந்த் ராஜன், மணிகண்டன் தலா ஒரு கோலும், சென்னை மாநகர போலீஸ் அணியில் கார்த்தி, டேவிட் ஆரோக்யராஜ் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி கோல் மழை பொழிந்து 10-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப் அணியை எளிதில் தோற்கடித்தது. தமிழ்நாடு போலீஸ் அணியில் அருணாச்சலம், ரகு, கண்ணன் தலா 3 கோலும், திருமுருகன் ஒரு கோலும் அடித்தனர்.

இன்னொரு ஆட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஏ.பி.எம். இன்போடெக் அணியை வென்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியில் தாமரை செல்வன் 2 கோலும், தங்க பாண்டியன், முகமது யாசீன் தலா ஒரு கோலும் போட்டனர்.

ஐ.சி.எப்.-தெற்கு ரெயில்வே அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஐ.சி.எப். அணியில் ஷியாம் குமாரும், தெற்கு ரெயில்வே அணியில் கவுதிமானும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-சென்னை துறைமுக கழகம் (காலை 6.30 மணி), ஏ.பி.எம்.இன்போடெக் -சென்னை மாநகர போலீஸ் (காலை 8 மணி), இந்திய உணவு கழகம்-வருமான வரி (பிற்பகல் 2.30 மணி), இந்தியன் வங்கி-ஜி.எஸ்.டி.மற்றும் கலால் வரி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து