கோப்புப்படம் 
ஹாக்கி

சூப்பர் டிவிசன் ஆக்கி: எஸ்.டி.ஏ.டி. அணி வெற்றி

சூப்பர் டிவிசன் ஆக்கி போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணி 9-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னை,

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்டேட் வங்கி 4-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை தோற்கடித்தது. ஸ்டேட் வங்கி அணியில் சுதன் 2 கோலும், வெற்றிவேல், விஜயராஜன் தலா ஒரு கோலும் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் கோல்மழை பொழிந்த எஸ்.டி.ஏ.டி. அணி 9-3 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீசை துவம்சம் செய்தது. எஸ்.டி.ஏ.டி. அணியில் சுந்தரபாண்டி 3 கோலும், முத்துகுமார், செந்தில்குமார், தினேஷ் குமார், ஆனந்த் ராஜ், சதீஷ், முருகேஷ் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இன்றைய ஆட்டங்களில் இந்தியன் வங்கி-ஏ.ஜி.அலுவலகம் (பிற்பகல் 2 மணி), ஐ.ஓ.பி.-தமிழ்நாடு போலீஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு