ஹாக்கி

சென்னையில் நடக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னையில் நடக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல் டிக்கெட்டை ஆக்கி இந்தியா அமைப்பின் செயலாளர் போலோநாத் சிங்கிடம் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ரூ.300, ரூ.400 விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. https://in.ticketgenie.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை