ஹாக்கி

முத்தரப்பு ஜூனியர் ஆக்கி: இந்திய பெண்கள் அணி முதலிடம்

முத்தரப்பு ஜூனியர் ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி முதலிடம் பிடித்தது.

கான்பெர்ரா,

முத்தரப்பு பெண்கள் ஜூனியர் ஆக்கித் தொடர் (21 வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 15-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் அபிகேல் வில்சன் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். 28-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் பெனால்டி வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் பிச்சு தேவி காரிபம் அபாரமாக தடுத்து நிறுத்தினார். ஆரம்பத்தில் சில கார்னர் வாய்ப்புகளை கோட்டை விட்ட நிலையில் 53-வது நிமிடத்தில் இந்திய மங்கை ககன்தீப் கவுர் பதில் கோல் திருப்பி சமனுக்கு கொண்டு வந்தார். ஆனால் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.

அடுத்த 3-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் அபிகேல் வில்சன் மீண்டும் ஒரு கோல் போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரலியா தலா 7 புள்ளிகளுடன் (4 ஆட்டம்) சமநிலை வகித்தன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...