image courtesy:twitter/@TheHockeyIndia 
ஹாக்கி

மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தல்

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிங்கப்பூர் உடன் இன்று மோதியது.

ஹாங்சோவ்,

11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.

இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே தாய்லாந்துக்கு எதிராக வெற்றியும், ஜப்பானுக்கு எதிராக டிராவும் கண்டிருந்தது.

இதனையடுத்து இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிங்கப்பூர் உடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 12-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை பந்தாடி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்