கோப்புப்படம்  
ஹாக்கி

உலகக் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை வீழ்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்

நடப்பு சாம்பியன் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வென்றது.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதியில் 'நம்பர் ஒன்' அணியான ஆஸ்திரேலியா 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தொடர்ந்து 12-வது முறையாக அரைஇறுதிக்குள் கால்பதித்தது.

இந்த ஆட்டத்தில் 54-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்பெயின் கேப்டன் மார்க் மிராலெஸ் வீணடித்தார். இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி இருந்தால் திரில்லிங்கான இந்த ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றிருக்கும்.

மற்றொரு கால்இறுதியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வென்றது. இன்று நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து-ஜெர்மனி (மாலை 4.30 மணி), நெதர்லாந்து-தென்கொரியா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து