ஹாக்கி

உலக ஆக்கி தொடர்: இந்திய அணி 2-வது வெற்றி

உலக ஆக்கி தொடரில், இந்திய அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

புவனேசுவரம்,

2-வது உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜப்பான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ரஷிய அணி 12-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை பந்தாடியது. இன்னொரு லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ரஷியாவை வென்று இருந்தது.

இந்திய அணியில் கேப்டன் மன்பிரீத் சிங் 2 கோலும், ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோலும் அடித்தனர். இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் அமெரிக்கா-மெக்சிகோ (மாலை 5 மணி), ஜப்பான்- தென்ஆப்பிரிக்கா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை