பாரிஸ்,
ஒர்லியான்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியா வின் தன்வி ஷர்மா 21-14, 21-17 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் அன் மோல் கார்ப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஹரிகரன்-எம்.ஆர்.அர்ஜூன் ஜோடி 26-24, 21-14 என்ற நேர் செட்டில் ஸ்காட்லாந் தின் அலெக்சாண்டர் துன்- ஆடம் பிரிங்லே இணையை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.