விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் 16-ந்தேதி நடக்கிறது

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 16-ந்தேதி நடக்கிறது.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில், கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ள தகுதி படைத்தவர்களை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் வருகிற 16-ந்தேதி மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது. தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பெயரும் இந்த பதவிக்கு நேரடியாக பரிசீலிக்கப்படும். வெஸ்ட் இண்டீசில் உள்ள அவரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்துவார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்