திருவனந்தபுரம்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவருக்கு அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக்குரல் எழுந்தன.
இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகளிலும் அவருக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அனைத்து போட்டிகளிலும் சோபிக்கவில்லை. ஒரு போட்டியில் கூட 50 ரன்கள் எடுக்கவில்லை. இன்று நடைபெற்ற போட்டியிலும் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது பார்ம் குறித்து ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்க வேண்டுமென இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்து இருப்பதாவது; “சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் வரிசையில் நிலையான இடம் கொடுக்க வேண்டும். மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டது நியாயமற்றது. அவர் தன்னுடைய பார்மை மீட்டெடுக்க அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.