விளையாட்டு

சர்வதேச போட்டிகளில் விளையாட மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை

பிரபல கால்பந்து நட்சத்திரமான மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அசுன்சியன்,

பிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் 3 மாதங்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பிரேசில் அணி வென்றது.

இந்த தொடரில் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த மெஸ்ஸி, "இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது" என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். சிலிக்கு எதிரான போட்டியில், தனக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெண்கல பதக்கத்தையும் வாங்க மெஸ்ஸி மறுப்பு தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. $50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும், தடையை எதிர்த்து மெஸ்ஸி மற்றும் அர்ஜெண்டினா அணி நிர்வாகம் மேல் முறையீடு செய்ய முடியும்.

மேல் முறையீட்டில் ஒருவேளை மெஸ்ஸி மீதான தடை நீக்கப்படாவிட்டால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிலி, மெக்ஸிகோ மற்றும் ஜெர்மனியுடன் நடைபெறவுள்ள போட்டிகளை அவர் தவறவிடக் கூடும்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு