விளையாட்டு

மனஅழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இருந்து நிக் மேட்டின்சன் விலகல்

மனஅழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இருந்து நிக் மேட்டின்சன் விலகினார்.

தினத்தந்தி

பெர்த்,

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம் பிடித்து இருந்த நிக் மேட்டின்சன் மனஅழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

27 வயதான மேட்டின்சன் 3 டெஸ்ட் மற்றும் 6 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். அவருக்கு பதிலாக கேமரூன் பான்கிராப்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லும் இதே போல் மனநல பிரச்சினையால் தற்காலிகமாக ஓய்வு பெற்றது நினைவு கூரத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை