பிற விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 14 வயதில் தங்கம் வென்றார் இந்தியாவின் நம்யா கபூர்

இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.

தினத்தந்தி

லிமா,

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பெரு தலைநகர் லிமாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா 8 தங்கப் பதக்கம் உட்பட மொத்தம் 17 பதக்கங்ளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது . அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 14 வயதான இந்தியாவின் நம்யா கபூர் தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதே பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் மிக இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.

இது குறித்து நம்யா கபூர் தந்தை பிரவீன் கூறியதாவது :

நம்யா தனது மூத்த சகோதரி குஷியுடன் சேர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்தியாவிலிருந்து தனியாகப் அவள் பயணம் செய்வது இதுவே முதல் முறை, ஆனால் அவள் தன்னை நன்றாகக் கையாண்டு உள்ளார்"

இவ்வாறு அவர் தெரிவித்தார் .

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்