பிற விளையாட்டு

உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்

உலக வில்வித்தையில், இந்தியா 2 வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது.

டென் போஸ்ச்,

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஜோதி சுரேகா , முஸ்கான் கிரார், ராஜ் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 229-226 என்ற புள்ளி கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா, துருக்கி வீராங்கனை ஏசிம் போஸ்டனை சந்தித்தார். திரிலிங்கான இந்த சுற்றில் இருவரும் தலா 145 புள்ளிகள் சேர்த்து சமநிலை வகித்தனர். வெற்றியை நிர்ணயிக்க நடத்தப்பட்ட டைபிரேக்கரில் ஜோதி சுரேகா 10-9 என்ற புள்ளி கணக்கில் ஏசிம் போஸ்டனை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...