Image Courtesy: PTI  
பிற விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர்களின் விசா நிராகரிப்பு

ஸ்பெயின் தூதரகம் 21 இந்திய மல்யுத்த வீரர்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்பெயின் நாட்டின் போன்டெவேத்ராவில் இன்று தொடங்கி வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 30 பேர் கொண்ட அணியை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தேர்ந்தெடுத்தது.

இந்த நிலையில் மிகவும் வினோதமான முடிவாக ஸ்பெயின் தூதரகம், 21 இந்திய மல்யுத்த வீரர்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளது. 30 பேரில் 9 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளதால் இந்திய அணியில் 21 வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் இந்தியாவின் முதல் பெண் உலக சாம்பியனான (20 வயதுக்குட்பட்ட) ஆண்டிம் பங்காலும் ஒருவர்.

இது தொடர்பாக பேசிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமர் "இது நாங்கள் இதற்கு முன் எதிர்கொள்ளாத ஒன்று. இந்திய அரசாங்கத்தின் அனுமதி மற்றும் உலக மல்யுத்த அமைப்பின் அழைப்பை முன்வைத்த போதிலும், எங்கள் மல்யுத்த வீரர்களுக்கு மிகவும் அற்பமான அடிப்படையில் விசா மறுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து