சென்னை,
தேசிய சீனியர் தடகளத்தில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
65-வது மாநிலங்களுக்கு இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் தமிழக வீரர், வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.
இந்தப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் 36 வீரர்கள் மற்றும் 41 வீராங்கனைகள் என மொத்தம் 77 பேர் பங்கேற்றனர்.
போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி, 9 தங்கம், 9 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 26 பதக்கங்களை கைப்பற்றியது.
இதன் மூலம் 109 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று . 96 புள்ளிகளுடன் அரியானா 2-வது இடத்தையும், 81 புள்ளிகளுடன் உத்தரபிரதேசம் 3-வது இடத்தையும் பிடித்தன.
தேசிய அளவிலான இந்த போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்கத்தின் சேர்மன் சி. லதா பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.