பிற விளையாட்டு

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் பங்கேற்ற 3 மல்யுத்த சங்க செயலாளர்கள் பணியிடை நீக்கம்

போராட்டத்தில் பங்கேற்றதாக அரியானா மல்யுத்த சங்கத்தைச் சேர்ந்த 3 செயலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் மீதான இளம் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்யக்கோரி கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் பங்கேற்றதாக அரியானா மல்யுத்த சங்கத்தைச் சேர்ந்த 3 செயலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கத்தைச் சேர்ந்த வீரேந்தர் சிங் தலால், சஞ்சய் சிங் மாலிக் மற்றும் ஜெய் பகவான் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் விதிகளை மீறி போராட்டத்தில் பங்கேற்றதால் இவர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் தலைவர் ரோஷ்தஷ் சிங் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து