பிற விளையாட்டு

4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளம் - சென்னையில் இன்று தொடக்கம்

4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளப் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்க உள்ளன.

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 33-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். 146 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டியின் அடிப்படையில் குண்டூரில் செப்டம்பர் 15 மற்றும் 16-ந் தேதி நடைபெறும் 30-வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டி, ராஞ்சியில் நவம்பர் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெறும் 34-வது தேசிய ஜூனியர் தடகள போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு