கோப்புப்படம்  
பிற விளையாட்டு

உலக சாம்பியன் கார்ல்சென் அணிக்கு 59-வது இடம்

செஸ் ஒலிம்பியாட்டில் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான நார்வே ஆண்கள் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தினத்தந்தி

நார்வே,

நார்வே அணியில் உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் இடம் பெற்றிருந்தார். அவர் நன்றாக ஆடினாரே தவிர அவரது அணியில் இடம் பெற்ற மற்றவர்களின் செயல்பாடு குறிப்பிடும்படி இல்லை.

11 சுற்றுகளின் முடிவில் நார்வே அணி 5 வெற்றி, 2 டிரா, 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 59-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கார்ல்சென் இந்த சீசனில் முதல் ஆட்டத்திலும் நேற்றைய கடைசி சுற்றிலும் விளையாடவில்லை. 9 ஆட்டங்களில் களம் கண்ட அவர் 6-ல் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டிருந்தார். தனிநபர் செயல்பாட்டில் போர்டு 1-ல் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு