பிற விளையாட்டு

ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில் தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு உற்சாக வரவேற்பு

ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில், 2 தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில், 2 தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், 25 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட, சென்னை நங்கநல்லூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஆதர்ஷ், 90 கிலோ எடைப்பிரிவு போட்டியில் 2 தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளார்.

இந்த நிலையில், சென்னை திரும்பிய ஆதர்ஷுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்