image courtesy: Badminton Association of India 
பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்; இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் உலக தர வரிசையில் 3ம் இடம் வகிக்கும் அன்டோன்சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பர்மிங்காம்,

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் இன்றைய ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென் மற்றும் உலக தர வரிசையில் 3ம் இடம் வகிக்கும் ஆன்டர்ஸ் அன்டோன்சென் ஆகியோர் விளையாடினர்.

55 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அன்டோன்சென்னை, உலக தரவரிசையில் 11வது இடம் வகிக்கும் இந்தியாவின் லக்சயா சென் 21-16, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.