கோப்புப் படம் 
பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: திரீசா - காயத்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை..!

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் திரீசா ஜாலி- காயத்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினர்.

தினத்தந்தி

பர்மிங்காம்,

பேட்மிண்டனில் மிகவும் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பெண்கள் இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடியினர் 14-21, 22-20, 21-15 என்ற செட் கணக்கில், தரநிலையில் 2-வது இடம் பெற்றிருந்த தென்கொரியாவின் லீ சோஹீ- ஷின் சியங்சான் இணைக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். 2-வது செட்டின் போது தோல்வியின் விளிம்பில் இருந்த ஜாலி- காயத்ரி ஜோடியினர் எதிராளிகளின் இரு 'மேட்ச் பாயிண்ட்' வாய்ப்புகளில் இருந்து தங்களை தற்காத்து கொண்டதுடன் அதன் பிறகு சுதாரித்து எழுச்சி பெற்று வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த போட்டியில் தங்களது முதல் முயற்சியிலேயே அரைஇறுதிக்கு வந்து ஆச்சரியப்படுத்திய இவர்கள் வெற்றிக்காக 1 மணி 7 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் வரலாற்றில் அரைஇறுதியை எட்டிய முதல் இந்திய பெண்கள் ஜோடி என்ற பெருமையையும் பெற்றனர். ஐதராபாத்தை சேர்ந்த 19 வயதான காயத்ரி, முன்னாள் பேட்மிண்டன் வீரரும், தேசிய பயிற்சியாளருமான கோபிசந்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை 22-24, 17-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் மார்கஸ் பெர்னல்டி- சுகமுல்ஜோ ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது