லக்‌ஷயா சென் (image courtesy: BAI Media via ANI)  
பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: லக்சயா சென் கால்இறுதிக்கு முன்னேற்றம்

நேற்று நடந்த கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் லக்சயா சென், டென்மார்க் வீரர் அன்டர்ஸ் ஆன்டோன்சென்னுடன் மோதினார்.

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 18-ம் நிலை வீரர் லக்சயாசென் (இந்தியா) 3-ம் நிலை வீரர் அன்டர்ஸ் ஆன்டோன்சென்னுடன் (டென்மார்க்) மோதினார்.

இந்த போட்டியில் லக்சயா சென், 24-22, 11-21, 21-14 என்ற செட் கணக்கில் அன்டர்ஸ் ஆன்டோன்செனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT