பிர்மிங்காம்,
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பிர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் மற்றும் த்ரீசா ஜோடி சீனாவின் ஜாங் - யு ஜெங் ஜோடியை எதிர்த்து விளையாடினர்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனைகள் 21-17 , 21-16 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தினர்.
இதன் மூலம் காயத்ரி கோபிசந்த் மற்றும் த்ரீசா இணை ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.