பிர்மிங்காம்,
பேட்மிண்டனில் மிகவும் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி மற்றும் தென்கொரிய வீராங்கனை அன் சியோங் மோதினர்.
இதுவரை யமகுச்சி மற்றும் சியோங் உலக சாம்பியன்ஷிப், உலக டூர் பைனல்ஸ் என 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இருவரும் தலா 3 முறை வென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 21-15, 21-15 என்ற செட் கணக்கில் சியோங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் யமகுச்சி.