பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து ஓபன்; இறுதி போட்டிக்கு முன்னேறிய லக்சயா சென்

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், 21-16, 18-21, 21-15 என்ற புள்ளி கணக்கில் லாயை வீழ்த்தி லக்சயா சென் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

பிர்மிங்காம்

இங்கிலாந்து நாட்டில் நடப்பு ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் போட்டியில், இந்திய வீரர் லக்சயா சென் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வருகிறார்.

அவர், நடப்பு சாம்பியனான ஹாங்காங்கின் கா லாங் ஆங்கசுக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி அவரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து, சீனாவின் லீ ஷிபெங்கை எதிர்கொண்டு காலிறுதியில் விளையாடி அவரை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து, அரையிறுதியில் கனடாவின் விக்டர் லாய் உடன் இன்று விளையாடினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், 21-16, 18-21, 21-15 என்ற புள்ளி கணக்கில் லாயை வீழ்த்தி லக்சயா சென் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

SCROLL FOR NEXT