பிற விளையாட்டு

அகில இந்திய கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் அணி வெற்றி

அகில இந்திய கைப்பந்து போட்டியில், டாக்டர் சிவந்தி கிளப் அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் டாக்டர் சிவந்தி கிளப் 25-21, 25-23, 25-19 என்ற நேர் செட் கணக்கில் கேரள போலீஸ் அணியை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய டாக்டர் சிவந்தி கிளப்புக்கு இது முதலாவது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் சாய் (தலசேரி) அணி 25-14, 25-19, 25-12 என்ற நேர் செட்டில் எஸ்.டி.ஏ.டி. (சென்னை) அணியை வீழ்த்தியது. ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி (சென்னை) அணி 25-19, 19-25, 25-16, 24-26, 15-10 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப்.பை போராடி வென்றது. இதே போல் தமிழ்நாடு போலீஸ் அணி 25-21, 19-21, 25-14, 26-24 என்ற செட் கணக்கில் வருமானவரி (குஜராத்) அணியை தோற்கடித்தது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை