பிற விளையாட்டு

அகில இந்திய கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி

அகில இந்திய கூடைப்பந்தின் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதிபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 44-வது அகில இந்திய மின்வாரிய அணிகள் இடையிலான கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேரளா அணி 67-29 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரைஇறுதிப்போட்டியில் தமிழக அணி 66-58 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தமிழக அணியில் சிவக்குமார் 39 புள்ளியும், ரவிச்சந்திரன் 11 புள்ளியும் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காலை 7 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரியானா-பஞ்சாப் அணிகள் சந்திக்கின்றன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்