பிற விளையாட்டு

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அமெரிக்க தடகள சாம்பியன்: 5 ஆண்டுகள் விளையாட தடை

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அமெரிக்காவின் 100 மீட்டர் தடகள சாம்பியன் பிரையன்னா மெக்நீல் 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புளோரிடா,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.

இந்நிலையில், தடகள ஒருங்கிணைப்பு பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஊக்க மருந்து சோதனையில் அமெரிக்காவின் பிரையன்னா மெக்நீல், 2வது முறையாக விதிமீறலில் ஈடுபட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதனால் அவர் 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையுத்தரவு கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதியில் இருந்து தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இதனை எதிர்த்து மெக்நீல் விளையாட்டு போட்டிகளுக்கான நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதேபோன்று ஊக்க மருந்து சோதனையில் இந்தியாவின் மல்யுத்த வீரர் சுமித் மாலிக் சிக்கியுள்ளார். இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு