பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

எகடெரின்பர்க்,

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட ஆசிய சாம்பியனான இந்திய வீரர் அமித் பன்ஹால், சீன தைபேயின் துபோ வெய்யை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக குத்துகளை விட்ட அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதே போல் 63 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுஷிக் 5-0 என்ற கணக்கில் நெதர்லாந்து வீரர் என்ரிகோ லாக்ரசை வீழ்த்தினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து