பிற விளையாட்டு

பேட்மிண்டன் அகாடமி அமைக்க ஸ்ரீகாந்துக்கு 5 ஏக்கர் நிலம்

திருப்பதியில் பேட்மிண்டன் அகாடமி அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி அறிவித்தார்.

தினத்தந்தி

அமராவதி,

சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஆந்திராவைச் சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார்.

உலக பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான அவரை ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு ரூ.7 லட்சம் ஊக்கத்தொகையும், திருப்பதியில் பேட்மிண்டன் அகாடமி அமைக்க 5 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

ஆந்திராவில் உதவி கலெக்டராக பணியாற்றும் ஸ்ரீகாந்த், தனக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதாக முதல்-மந்திரி உறுதி அளித்ததாகவும், திருப்பதியில் உலகத்தரம் வாய்ந்த பேட்மிண்டன் அகாடமியை உருவாக்குவேன் என்றும் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து