Image : AFP  
பிற விளையாட்டு

உலகக்கோப்பை வில்வித்தை: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்

இறுதிப்போட்டியில் தீபிகா குமாரி,கிம் சிஹ்யோனிடம் மோதினார்.

பெய்ஜிங் ,

சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் மகளி தனிநபா பிரிவு அரையிறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தீபிகா குமாரி , தென்கொரியாவின் நாம் சுஹ்யோன், கிம் சிஹ்யோன் மற்றும் சீனாவின் லீ ஜியாமன் ஆகிய 4 பேர் தகுதிபெற்றனர்.

இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபிகா குமாரி, தென்கொரியாவின் நாம் சுஹ்யோனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் தீபிகா குமாரி, தென்கொரியாவின் கிம் சிஹ்யோனிடம் மோதினார். இதில் 0-6 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். இதனால் இரண்டாம் இடம் பிடித்த தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...