பிற விளையாட்டு

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; மலேஷியாவிடம் தோல்வியடைந்த இந்தியா!

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவின் ஷா அலாம் நகரில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

ஷா அலாம்,

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவின் ஷா அலாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் இந்தியா நேற்று நடைபெற்ற தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி மலேஷிய அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் இந்தியா மலேசியாவிடம் வீழ்ந்தது. எனினும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாரா ஷா வெற்றி பெற்றனர். மற்ற 3 ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.

முன்னதாக தென் கொரிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற லக்ஷயா சென் தலைமையிலான இந்திய ஆடவர் அணி ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு