பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பி.வி. சிந்து , பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

லக்சயா சென் , கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2வது சுற்றில் தோல்வி அடைந்தனர்.

தினத்தந்தி

நிங்போ,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின்2வது சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி. சிந்து (இந்தியா) , சீனாவின் ஹான் யுவுடன் மோதினார் .பரபரப்பான இந்த ஆட்டத்தில் 18-21, 21-14,21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது ஆட்டம் ஒன்றில்  இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய் , சீனாவின் லு குவாங்-ஐ எதிர்கொண்டார் . இதில் 17-21, 23-21, 23-21 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று ஹெச்.எஸ். பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் இந்திய வீரர்களான லக்சயா சென் , கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு