நிங்போ,
43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொண் டார்.
விறுவிறுப்பான ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி சரிவில் இருந்து மீண்டு 10-21, 21-19, 21-17 என்ற செட் கணக் கில் குன்லாவுத் விதிச்சரணுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.