பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன்: இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேசியா) எதிர் கொண்டார்.

நிங்போ,

43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வரு கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேசியா) எதிர் கொண்டார்.

விறுவிறுப்பான ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 23-21, 21-17 என்ற நேர்செட்டில் ஜோனதன் கிறிஸ்டிக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.