பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா?

ஆசிய பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனைகளான சாய்னா, சிந்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

யுஹான்,

39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் யுஹான் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் 1965-ம் ஆண்டில் இந்தியாவின் தினேஷ் கண்ணா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் இங்கு மகுடம் சூடியதில்லை. 54 ஆண்டுகால அந்த ஏக்கத்தை சாய்னா, சிந்து தணிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியில் 3 முறை வெண்கலப்பதக்கம் வென்றுள்ள சாய்னா தனது முதல் சுற்றில் ஹான் யுவை (சீனா) இன்று சந்திக்கிறார். பி.வி.சிந்து முதல் சவாலை சயாகா தகாஹஷியுடன் (ஜப்பான்) தொடங்குகிறார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்