துபாய்,
துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பேட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தானின் நாஜிம் கிசாய்பே - இந்திய வீராங்கனை மேரி கோம் மோதினர். 6 முறை உலக சாம்பியன் மேரி கேம் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தார். இதனால், அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.