பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டுப்போட்டி: இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. #AsianGames2018

தினத்தந்தி

ஜகார்த்தா,

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான ஸ்குவாஷ் அரையிறுதி போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் இன்று மோதின.

பெண்கள் அணிகளுக்கான ஸ்குவாஷ் பி பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி முதல் நான்கு போட்டியில் ஈரான், தாய்லாந்து, இந்தோனேஷியா, சீனா அணிகளை வீழ்த்தி ஏற்கனவே அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்திருந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1-2 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.

பின்னர் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி 5 போட்டியில் 4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளிகளுடன் பி பிரிவில் 2வது இடம் பிடித்தது. இதன்மூலம் பி பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற இந்திய அணி, ஏ பிரிவில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியனான மலேசியாவை இன்று எதிர்கொண்டது. இதில் இந்திய விராங்கணைகளின் சிறப்பான ஆட்டத்தால் 0-2 என்ற புள்ளிக்கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து