ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று தடகளத்தில் 10000 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வீரர் லக்ஷ்மணனனுடன் 12 பேர் கலந்து கொண்டனர்.
இதில் பஹ்ரைன் வீரர் ஹசன் சானி 28 நிமிடம் 35:54 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ரஹாம் செரோபென் 29 நிமிடம் 00:29 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதில் தமிழக வீரர் கோவிந்தம் லக்ஷ்மணன் வெண்கலம் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்திற்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்யப்பட்டதாகவும், இதனால் அவர் வெண்கலம் வென்றது செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.