சென்னை,
இந்தோனேஷியாவில் நடந்துவரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் நேற்று மகளிருக்கான ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதி போட்டி நடந்தது. இதில் இந்திய அணி, ஹாங்காங் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் ஹாங்காங் அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.