பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #EdappadiPalanisamy

தினத்தந்தி

சென்னை,

இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 14-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா தனது 15வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

இதில் பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டில் பிரணாப் பர்தான், ஷிப்நாத் சர்கார் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் ஆண்களுக்கான 49 கிலோ எடைபிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அமித் பன்ஹால், உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் டுஸ்மாட்டோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமலுக்கு ரூ20 லட்சமும், பாய்மர படகு குழு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகியோருக்கு தலா ரூ20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்