பிற விளையாட்டு

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி.

துபாய்,

ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் ஜூனியர் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை விஷ்ணு ரதி, மங்கோலியாவின் ஒட்கான்பாத் யெசுன்குலெனை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சரமாரியாக குத்துவிட்ட விஷ்ணு ரதி 2 நிமிடத்துக்குள் எதிராளியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 52 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை தானு 5-0 என்ற கணக்கில் நேபாளத்தின் சோஸ்திகாவையும், 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை நிகிதா சந்த் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் முகுசா டாஹிரோவாவையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு