பிற விளையாட்டு

ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: அரைஇறுதியில் சரிதா, சோனியா

ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: சரிதா, சோனியா அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

ஹோ சி மின் சிட்டி,

8-வது ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் 64 கிலோ எடைப்பிரிவில் நடந்த கால்இறுதியில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் எல்.சரிதாதேவி, உஸ்பெகிஸ்தானின் மாப்டுனாகோன் மெலிவாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சோனியா லாதர் (57 கிலோ), கஜகஸ்தானின் நஸ்யிம் இசிஷனோவாவை தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார். 69 கிலோ பிரிவில் இந்திய மங்கை லவ்லினா போர்கோஹைன் தன்னை எதிர்த்த மங்கோலியாவின் என்க்பாடாரை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

அரைஇறுதியை எட்டிய மூன்று பேருக்கும் குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவின் மேரிகோம், பிரியங்கா, ஷிக்ஷா ஆகியோரும் அரைஇறுதிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...