பிற விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள்; பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்

கஜகஸ்தானில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகளான நிஷா தஹியா மற்றும் பிரியா பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

தினத்தந்தி

ஆஸ்தானா,

கஜகஸ்தானின் ஆஸ்தானா நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிருக்கான 68 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா கலந்து கொண்டார்.

அவர் போட்டியில் 10-10 என்ற புள்ளி கணக்கில் மங்கோலிய வீராங்கனையான தெல்கர்மா என்க்சாய்கானை காலிறுதி போட்டியில் வீழ்த்தி முன்னேறினார். அரையிறுதி போட்டியில் சீனாவின் பெங் ஜாவை வீழ்த்தினார்.

எனினும் இறுதி போட்டியில் ஜப்பானின் அமி இஷி அதிரடியாக விளையாடி தங்கம் தட்டி சென்றார். நிஷா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று மகளிருக்கான 76 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை பிரியா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஜப்பானின் மிஜுகி நாகஷிமாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதனால், இந்தியாவின் பதக்கம் 6 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கு முன்பு, ரூபின் (55 கிலோ) வெள்ளி பதக்கமும், நீரஜ் (63 கிலோ), விகாஸ் (72 கிலோ) மற்றும் சுனில் குமார் (87 கிலோ) வெண்கல பதக்கங்களும் வென்று உள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்