பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு 4-வது தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018

தினத்தந்தி

பாலெம்பேங்,

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று இந்தியா ஒரே நாளில் 5 பதக்கங்களை அள்ளியது.

இந்த நிலையில், இந்தியாவின் பதக்க வேட்டை இன்றும் நீடிக்கிறது, மகளிர் 25 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் ராஹி சர்ன்பட் தங்கம் பதக்கத்தை தட்டிச்சென்றார். ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வெல்லும் 5-வது தங்கம் இதுவாகும்.

இந்தியா தற்போது வரை 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது. 32 தங்கம், 21 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்