பிற விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் ஆடவர் வில்வித்தை போட்டி; இந்தியாவின் அடானு தாஸ் வெண்கலம் வென்றார்

ஆசிய சாம்பியன்ஷிப் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அடானு தாஸ் வெண்கலம் வென்றார்.

தினத்தந்தி

பாங்காக்,

ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடந்து வருகின்றன.

இதில் ஆடவர் பிரிவு தனிநபர் போட்டியில் கொரியாவின் ஜின் ஹேயெக் ஹோ என்பவரை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் அடானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று நேற்று நடந்த கலப்பு பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியுடன் சேர்ந்து விளையாடியதில் வெண்கல பதக்கம் கிடைத்தது.

இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா வென்னம் ஆகிய இருவரும் நாளை நடைபெறும் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் சீன தைபே இணையை எதிர்த்து விளையாடுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது