பிற விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, காஷ்யப் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் சிந்து, காஷ்யப் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 21-14 என்ற நேர்செட்டில் லீ டாங் குன்னை (தென்கொரியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 21-16, 21-15 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் சுபன்யு அவிங்ஷனோனை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-15, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஜி ஜியாவை சாய்த்தார். இந்திய வீரர் பிரனாய் 18-21, 19-21 என்ற நேர்செட்டில் சீன வீரர் லின் டானிடம் வீழ்ந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-9 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் கோரினிசாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு