பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை கவுரவித்த பிசிசிஐ

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் ஐபிஎல் தொடக்க விழாவின் போது கவுரவிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் இன்று துவங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. போட்டி தொடங்கும் முன்பாக ஐபிஎல் 2022 தொடருக்கான தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் ,வீராங்கனைகள், பிசிசிஐ சார்பில் பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. வெண்கல பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைனுக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கபடது. அதேபோல் ஆடவர் ஹாக்கி அணிக்கும் ரூ. 1 கோடிக்கான காசோலை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு